Followers

Wednesday, August 25, 2010

சமையல் குறிப்பு : கிரீன் மசாலா சப்பாத்தி

கண்ணுக்கு குளுமையான, பசுமையான நிறத்தில், வாய்க்கு ருசியான கிரீன் மசாலா சப்பாத்திசெய்வது எப்படி என்று தான் இன்றைய சமையல் குறிப்பில் பார்க்க இருக்கிறோம்.

தேவையான பொருட்கள் :


கோதுமை மாவு - 2 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
நெய் - எண்ணெய் கலவை - தேவையான அளவு

அரைக்க தேவையான பொருட்கள்:

புதினா - 1 கைப்பிடி
கொத்தமல்லித்தலை - 1 கைப்பிடி
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 2 பல்
பச்சை மிளகாய் - 3
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை :

  1. அரைக்க எடுத்துள்ள பொருட்களை எல்லாம் எடுத்து, அரைத்துகொள்ளுங்கள்.
  2. கோதுமை மாவுடன் அரைத்த விழுதுகளை சேருங்கள்
  3. அதனுடன், நெய், உப்பு தேவையான தண்ணீர் சேர்ந்தது நன்கு மென்மையாக
    பிசையுங்கள்.
  4. பிறகு, சிறு உருண்டைகளாக பிரித்து, அதனை சப்பாத்தி கட்டையால் உருட்டி கொள்ளுங்கள்.
  5. தோசை கல்லில்/ தவாவில் எண்ணெய் - நெய் கலவையை சேர்த்து வேகவிட்டு எடுங்கள்.
  6. கண்ணுக்கு குளுமையான பசுமையான நிறத்தில், வாய்க்கு ருசியான கிரீன் மசாலா சப்பாத்தி தயார். 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஒரு நிமிஷம் எனக்காக செலவு செய்து வோட்டு போடுங்க. உங்க நல்ல கருத்தையும் எழுதுங்க. நன்றி. மீண்டும் வருக!!!

0 comments:

Post a Comment

Labels

actress (1375) hot photos (1005) cinema news (536) Actor (459) Images (151) others (124) Hot And Spicy (52) songs (33) Actorss (30) models (26) Reviews (10) videos (9) Lyrics (5) Privacy Policy (2) cricket (2) Contact Us (1) Movie Mp3 songs (1) Trailers (1) h (1)

Blog Archive