Followers

Wednesday, August 25, 2010

சீரகத்தின் 15 மருத்துவ குணங்கள்

நாம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?

சீரகம் ஒரு மருத்துவ மூலிகையாகும். சீர் + அகம் = சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது.

கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது.

சீரகத்தின் 15 மருத்துவப் பயன்கள்:-
  1. மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடைகுறையும்.
  2. சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்றுகுணமாகும்.
  3. கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும் வாந்தியைக் குறைக்க எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரககுடிநீரை சேர்த்துக் கொடுக்கலாம்.
  4. ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்குநிற்கும்.
  5. சீரகம் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.
  6. மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.

  7. சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
  8. சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.
  9. கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால்,தொடர் விக்கல் விலகும்.
  10. பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை, நெஞ்செச்ரிச்சல் தீர சீரகம் + கொத்தமல்லி+ சிறிது இஞ்சி இவைகளை லேசாகவறுத்து நீரில் கொதிக்கவைத்து வடித்து தேநீர் போல வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகி வரலாம்.
  11. வாய்ப்புண், உதட்டுப்புண் குணமாக சீரகம் + சின்னவெங்காயம் இவற்றை லேசாக நெய்விட்டு வதக்கி உண்ணலாம்.
  12. சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
  13. சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லாஉடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும்.
  14. "ஓமம், சீரகம் கலவை வய்ற்றுக்கு மருந்து"
  15. தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்'தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும்.
என்ன பிடிச்சிருக்கா ...? அப்ப உங்க வோட்டை உடனே குத்துங்க... நன்றி. மீண்டும் வருக!!!

0 comments:

Post a Comment

Labels

actress (1375) hot photos (1005) cinema news (536) Actor (459) Images (151) others (124) Hot And Spicy (52) songs (33) Actorss (30) models (26) Reviews (10) videos (9) Lyrics (5) Privacy Policy (2) cricket (2) Contact Us (1) Movie Mp3 songs (1) Trailers (1) h (1)

Blog Archive